எனக்கே நான் புரியாத புதிர்

Wednesday, July 24, 2019

நினையே நினைக்கிறேன்

நினை
நினைக்காமல் இருக்கவே
நினைக்கிறேன்.
அந்த நினைப்பையும்
மறந்தும்
நினையே நினைக்கிறேன்.
நினை
நினைக்கையில்
நிகழ்ந்தவை
நினைக்கிறேன்.
அதை நினைப்பதால்
நினை நினைப்பதை நினைக்க மறுக்கிறேன்.

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

விதைதனை விதைத்து பழம்தனை நோக்கி காத்திருக்கையில்;
காய் வருவதைக் கண்டு
கனியும் என நம்பி கவலை கொள்வதில்லை மனமே.

நல்விதையொன்று விதைத்து
விஷ செடி ஒன்று முளைக்க
விதி என்று சொல்ல
மதியும் விளையுதடா.

குணம் காண்

குணங்கெட்ட குதிரைமேலேற் சவாரி செய்வானேன்
குதிரை குணங்கண்டு தினம் மனம் நோவானேன்.

நட்பின் தோல்வி

அழகாய் நான் கண்ட யாவும்
அழகு துறந்தது
என்  விழியின்  குறையால் அன்று,
உன் நடையின் வழியால்.
நீ கூனிக் குறுகி நின்றது என் வெற்றி அன்று நம் நட்பின் தோல்வியே.

லிட்டில் பூச்சியல்ல

தனை செதுக்கும்
பெண்ணின் சிலைதனை
உன்னில் கண்டேன்.
சுயம் மறந்து நெருப்பில் விழும் விட்டிலாய் வீழ்ந்து விடாதே.

நட்பின் தரம்

நின் செயல்
உன் தரத்தையும்
நம் நட்பின் தரத்தையும்
காட்டுமே.
தரம் தாழ்ந்து
பின் சிரம் தாழ்த்த வேண்டாம்.

நட்பும் கற்பும்

நட்பிற்குமுண்டாம் கற்பு,
இங்கு அதில் அதை இழந்தோரே பெரும்பங்கு.

மடமை எண்ணுதல்

பிறன் மூடனென எண்ணி மடமை புரிவோர், மடமை எண்ணி வியத்தலும் வீணே.

ம*ம்

ம*ம் என்று தெரிந்து கழுவிடவே மறுத்தால் துற்மணம் வீசும் மனமே.
அதை உண்டு வாழும் உயிர்க்கு அந்த கறையொன்றும் குறையில்லை மனமே.

பெண் பித்தன் உறவு

பேய் பிடித்தவரின் உறவிலும்
பெண் பித்து பிடித்தவன் உறவே கொடிது

என் வாழ்வின் எல்லாமுமாய்

தாயாய் சேயாய் நீயாய்
தந்தையாய் சிந்தையாய் விந்தையாய்
வானாய் மண்ணாய் நானாய்
ஆணாய் பெண்ணாய் அனைத்துமாய் நீயானாய்
இணையாய் துணையாய் பிணையாய்
பணிவாய் துணிவாய் பிணியாய்
வளியாய் ஒளியாய்
எல்லாமுமாய் ஆனாய்
முருகா
என் வாழ்வின்
எல்லாமுமாய் ஆனாய்
நீ
முருகா

புதிதாய் காணச்செய்.

உனை முட்டாளாய்
நோக்கும் உலகை
உதாசீனம்  செய்து
உனை புதிதாய் காணச்செய்.

ஏனோ

உணர்வைத் கெடுத்து
உணவை கெடுத்து
உறக்கம் கெடுத்து
உடலைக் கெடுத்து
உறவையும் கெடுத்து
உயிரை எடுப்பது ஏனோ