ஒன்றை முன் கொண்டு அதனில் பாதி பின் கொண்டு, தனக்கு முன் பிறந்து, பெயரிலே மட்டும் குறைந்த, தான் வாழப்போகும் நாளே வாழ்ந்து விட்டு போகும் தன் உடன் பிறப்பாம் 2009 ஐ வழியனுப்பும் 2010 ஐ வரவேற்பதோடு, நாம் வந்த பாதையை எண்ணிப்பார்த்து 2009 க்கு நன்றி கூறி வழி அனுப்புவோம். ஜாதி மத பேதமின்றி, மத இன மாறுபாடின்றி, நிற குல வேற்றுமையின்றி, ஆண் பெண் அனைவருமாய் அன்பை மட்டும் கையில் கொண்டு மனிதனாய் மனிதம் வளர்ந்திடவே ஒன்று கூடி செயல் படுவோம்.
இடம் : நாடக மேடை (உலகம் ஒரு நாடக மேடை அன்றோ)
நேரம் : 15:59 GMT (31.12.2009) முதல் 10.59 GMT (01.12.2009) வரை
பங்குகொள்வோர் : மக்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thursday, December 31, 2009
Sunday, December 20, 2009
அவதார்
விமர்சனம் இல்லை - வேற்றுகிரக வாசிகளுடன் வாழ்ந்துவந்த அனுபவம்
டைடானிக் இயக்குனரின் மற்றுமொரு அற்புத படைப்பு. பல ஆண்டுகால உழைப்பின் பிறப்பு.
கருவும் கற்பனையும் அருமையிலும் அருமை.
விலை மதிப்பில்லா கனிம தாது இருக்கும் கிரகம், 'நாவி' எனும் வேற்றுகிரக வாசிகள் இருக்கும் அந்த பாண்டோரா கிரகம். புவியில் வாழும் சில ஜீவராசிகளின் சாயலில் மனிதர்களும் மற்றும் பல விலங்குகள் வாழும் பசுமையான கிரகம்.
புவியில் இருந்து சில ஒளி ஆண்டுகள் (சரியான தூரம் கதைக்கு அவசியம் இல்லை) தூரம் இருக்கும் அந்த பாண்டோராவிற்கு (இனி கிரகத்தை அதன் பெயராலேயே அழைப்போம்) புவியில் இருந்து ஆராய்ச்சி குழுவும், ராணுவ குழுவும் கனிமங்களை கைபற்றும் நோக்குடன் செல்கின்றன.
பண்டோரா கிரகவாசிகளான நாவிகள் 3 மீட்டருக்கும் உயரமான , நீல நிறதேகமும் கொண்ட மனிதரிகள் தோன்றுகிறார்கள். திரையில் காணும் போது நிஜ ஜீவிகள் போலவே உள்ளார்கள்.
நம் கதாநாயகன் ஜேக் கப்பல் படையில் பணிபுரிந்து விபத்தில் தனது இரு கால்களின் செயல்பாடுகளையும் இழந்தவன். அவனது இரட்டை பிறவியான அண்ணனின் மரணத்தின் காரணமாய் அண்ணன் மேற்கொள்ள வேண்டிய இந்த அவதார் ஆராய்ச்சி பணிக்கு, அண்ணனின் ஒத்த உருவம் கொண்ட ஜேக், பாண்டோரா அழைத்து வரப்படுகிறான்.
நாவிகள் போல் தோற்றம் அளிக்கும் உடலை உருவாக்கி அதற்க்கு மனிதனின் ஆன்மாவை செலுத்தி (கூடு விட்டு கூடு பாய செய்வது போல்) உண்மையான நாவி மனிதர்கள் மத்தியில் உலாவ விடுதலே நமது ஆராய்ச்சியாளர்களின் வேலை. அதுபோல் உருவாக்கப்படும் செயற்கை நாவிகளே 'அவதார்'.
கிரேஸ் , இந்த ஆராய்ச்சி கூடத்தின் தலைமை ஆராய்ச்சியாளர், நாவிகளை பற்றி அறிந்தவர், அவர்களை பற்றி நூல் எழுதியவர். நாவிகளுடன் கலந்த அனுபவம் உள்ளவர். இவரது தலைமையில் ஜேக் மற்றும் அவரது நண்பர் , மூவரும் ஒரு பெட்டியினுள் தஞ்சம் கொண்டு சுய நினைவு அகல, வேறொரு இடத்தில் இருக்கும் நாவிகளின் செயற்கை உடலுக்குள் 'அவதார்' ஆக உருவெடுக்கிறார்கள்.
அவதார் ஆக உருவெடுத்த கதாநாயகன் தன் கால்கள் செயல் படுவதால் ஏற்படும் பேரானந்தத்தை அவனது ஓட்டம் எடுக்கும் காட்சியில் அற்புதமாய் படமாக்கி இருக்கிறார்கள்.
பின் கிரேஸ், ஜேக் மற்றும் அவனது நண்பன் மூவரும் நாவிகள் இருப்பிடம் நோக்கி வருகிறார்கள்.
அங்கு மிருகமொன்று விரட்ட கதாநாயகன் கதைக்குள் வருகிறான்.
இங்கு அந்த காட்டின் காட்சியாக்கம் , வந்து மிரட்டும் குரங்கு, காண்டா மிருகம் , ஓநாய் , ஓணான் போன்ற பூமியில் இருக்கும் விலங்குகளை ஒத்த விலங்குகளின் தோற்றம் அருமை.
அவ்வாரு காட்டிற்குள் தனியே சிக்கும் கதாநாயகனை ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றி நமது கதா நாயகி(நாவி பெண்) காட்சி தருகிறாள். நாயகனை தனது குழுவிற்கு அழைத்து செல்லும் நாயகியே அவனுக்கு நாவி மக்களின் வாழ்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் கற்பிக்கும் பொறுப்பிற்கு ஆளாகிறாள்.
அவ்வாறே நாயகனும் நன்கு கற்று நாவி மக்களின் நம்பிக்கைக்கும் நாயகியின் காதலுக்கும் உரியவனாகிறான். நாயகன் பாதி நேரம் மனிதனாய் ஆராய்ச்சி கூடத்திலும் மீதி நேரம் அவதாராய் நாவிகளுடனும் இருக்கிறான். நாவிகள் இயற்கையை வணங்குவதும் , பிற உயிர்களை மதிப்பது நாயகனை கவர்கிறது.
நாவிகளின் இருப்பிடமோ ஒரு மிகப்பெரிய மரத்தின் மீது, மனிதர்கள் தேடும் கனிமமோ அம்மரத்திற்கடியில். நாவிகளை அவ்விருப்பிடம் இருந்து அகற்றுவதே ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அதற்கு கதாநாயகனுக்கு கொடுகப்பட்ட கால்ம் மூன்று மாதம். இயலாத பட்சத்தில் அவர்களை அழிப்பதே இவர்களின் நோக்கம்.
நாவிகள் செயற்பாடுகள் மீது ஈடுபாடு கொண்ட நாயகனோ மூன்று மாத காலத்திற்கு பின் அவர்களை அகற்றுவது கூடாது என உணர்கிறான். இதையறிந்த ராணுவ வீரர்கள் அவனது உடலை தட்டி எழுப்பி அவனது அவதாரை செயலிழக்க செய்து மூவரையும் சிறை பிடிக்கிறார்கள்.பின் பெரும் ஆயுதம் கொண்டு நாவிகளின் இருப்பிடமான மரத்தை அழிக்கிறார்கள்.
பின் அவர்கள் மூவரும் எப்படி நாவிகளை அடைகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற ஆர்வத்தை அதிகரித்து நமை இருக்கையின் நுணிக்கே கொண்டு வருகிறார் நமது இயக்குனர்.
அருமையான சண்டை காட்சிகள், நிஜமென நம்பும் அளவு கிராபிக்ஸ் காட்சிகள், மிதக்கும் மலைகள், அதிர வைக்கும் பறவைகளும் அதில் சவாரியும் அப்பப்பா பிரமாண்டம்.
முப்பரிமாண் திரையில் காண்பதினால் நீங்கள் பாண்டோரா சென்று நேரில் காணும் ஒரு உணர்வு ஏற்படுவது உறுதி.
மொத்தத்தில் அருமையான படம், அனைவரும் பார்க்க வேண்டிய, பார்க்க கூடிய படம்.
உருவாக்கிய அனைவருக்கும் ஒரு சலாம், இயக்குனருக்கு ஒரு தனி சலாம்,

Saturday, December 19, 2009
மருந்து வாழ்க்கை
கசப்பாய் உண்டாய் மருந்தை
நீ குணம் பெற - அதுபோல்
கசப்பாய் இருக்கும் வாழ்கை
உன் மனம் திடம் பெற
நீ குணம் பெற - அதுபோல்
கசப்பாய் இருக்கும் வாழ்கை
உன் மனம் திடம் பெற
க(ல்)டவுள்
இல்லை என்பது எளிது -
இல்லாமல் ஆக்குவது அதனினும் எளிது -
தொல்லை என்று வந்தால் -
கல்லை நோக்கி ஒடுவோம் நாங்கள்
இல்லாமல் ஆக்குவது அதனினும் எளிது -
தொல்லை என்று வந்தால் -
கல்லை நோக்கி ஒடுவோம் நாங்கள்
உணர்வதுவே உணர்வு,
புரிவதுவே உறவு
இரண்டும் கொண்டோம் அவனிடம்
காத்திருக்கிறேன்
கண்ணே
நேரில் காணும் வரை
காத்திருக்கச் சொன்னாய்,
காதலை நீ சொல்லும் வரை
சாத்தியமாய் இருந்ததடி.
சொன்ன நொடி முதலாய்
சொர்கமும் நரகமானதேன்,
சாவது போல் உணர்கிறேன்
சத்தியமாய் உண்மையடி.
நேரில் காணும் வரை
காத்திருக்கச் சொன்னாய்,
காதலை நீ சொல்லும் வரை
சாத்தியமாய் இருந்ததடி.
சொன்ன நொடி முதலாய்
சொர்கமும் நரகமானதேன்,
சாவது போல் உணர்கிறேன்
சத்தியமாய் உண்மையடி.
ஏய் பெண்ணே!
ஏய் பெண்ணே!
பிரம்மன் தீட்டிய கவிதை நீ என எண்ணி
உனை கூடும் நாள் நோக்கி தவமிருந்தேன்
கவிதை எழுதும் என் பணி தனையும் நான் மறந்தேன்
நான் படும் துன்பம் கூறுவது நீ இரங்க அன்று
நாளை நான் கூட எண்ணுகின்ற வேளையில்
நீ என் உட்லோடு மனம் கூடி இன்பம் தந்து பெறவே
உன் கையாலே உண்டு
உன் மடியிலே உறங்கி
உன் பூவிதழ் சுவைத்து
உன் மார்போடு ஒன்றி
வாழ்கின்ற வாழ்வே வாழ்வு
காமத்திலே நான் மிதப்பது
என் காதலின் ஒரு சிறு பகுதியென்றால்
என் காதலின் அளவை கண்டோயோ பெண்கிளியே
நீ காண்பதுவென் காமத்தின் சாரமன்று
என் காதலுன் மீது பாயும் ஆழம்
Saturday, September 12, 2009
காதல் போதை
பெண்ணுக்குள் போதை வைத்தான் -அவள்
கண்ணுக்குள் காதல் வைத்தான்
எனை அவள் காணும் போது நெஞ்சுக்குள்
பூகம்பம் தானே - அதுவும்
இதமான வேதனை தானே
அவள் கண்கள் கண்ட போது துக்கம் இல்லை
அவள் என்னை கண்ட முதலாய் தூக்கம் இல்லை
நான் காதல் எனும் தேர்வில் தேறிவிட்டேன்
ஒரு கானம் பாடும் கவியாய் மாறிவிட்டேன்
கண்ணுக்குள் காதல் வைத்தான்
எனை அவள் காணும் போது நெஞ்சுக்குள்
பூகம்பம் தானே - அதுவும்
இதமான வேதனை தானே
அவள் கண்கள் கண்ட போது துக்கம் இல்லை
அவள் என்னை கண்ட முதலாய் தூக்கம் இல்லை
நான் காதல் எனும் தேர்வில் தேறிவிட்டேன்
ஒரு கானம் பாடும் கவியாய் மாறிவிட்டேன்
Wednesday, March 28, 2007
கானல்நிலம்
யானறியேன் இன்னாள் வரையில்
காலதேவன் கொடுமையானவன் என்று
என்வாழ்வில் கடிகார நொடிமுள்ளாய்
கட்டாற்று வேகத்தில் கடந்துசெல்கிறான்
கரைதேடும் படகாய் அந்த
கட்டாற்றின் நடுவே நானும்
கண்டுவிட்டேன் எந்தன் கரையை
இருந்தும் விழைந்ததொரு ஐயம்
காண்பது வெளியேறக் கரையோ
இல்லை மெல்லமறையும் கானல்நிலமோ?
தகிக்கும் நிலத்திலொருக் கானல்நீர்போல்
சுழலும் நீரிலொறு கானல்நிலமோ?
கரையேறக் காத்திருக்கும் படகு
கரையேறக் கைக்கொடுப்பது யாரோ?
காலதேவன் கொடுமையானவன் என்று
என்வாழ்வில் கடிகார நொடிமுள்ளாய்
கட்டாற்று வேகத்தில் கடந்துசெல்கிறான்
கரைதேடும் படகாய் அந்த
கட்டாற்றின் நடுவே நானும்
கண்டுவிட்டேன் எந்தன் கரையை
இருந்தும் விழைந்ததொரு ஐயம்
காண்பது வெளியேறக் கரையோ
இல்லை மெல்லமறையும் கானல்நிலமோ?
தகிக்கும் நிலத்திலொருக் கானல்நீர்போல்
சுழலும் நீரிலொறு கானல்நிலமோ?
கரையேறக் காத்திருக்கும் படகு
கரையேறக் கைக்கொடுப்பது யாரோ?
Wednesday, February 14, 2007
வாழ்த்துகள்
கடவுள பாக்காம கும்புடுறான்
கடவுள உணராம திட்டுறான்
சாதியே இல்லைன்னு கத்துறான்
சாதியே இல்லான்காட்டி கலங்குறான்
ஜனநாயக ஆட்சின்னு நடத்துறான்
ஜனநாயகத்தை கொலை பண்ணுறான்
காதல்னு தன் உசிரை கொடுக்குறான்
காதல்னு பிற உசிரை எடுக்குறான்
காதல் இருந்து தவிக்குறான்
காதல் இல்லாம புலம்பறான்
தவறை தட்டிகேக்க துடிக்கறான்
தவறை தவறாம செய்யிறான்
உள்ளொன்றும் புறமொன்றும் பேசுறான்
உள்ளபோய் புறம்வந்தும் தொடருறான்
எல்லாரையும் மனமுவந்து வாழ்த்ததான்
எல்லாரையும் பத்தியிங்கே எழுதுறேன்
எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துகள் [சமுதாயம் முன்னேறுதோ இல்லையோ]

Friday, January 5, 2007
நிதர்சனக்காதல்
காதல் சொல்ல எண்ணிக் கவிதைகள் தீட்டினேன்
கற்பனைப் பொங்கச் சொல்லி மூளையை கசக்கினேன்
காற்றோட்டம் போல் கவிதைப் பொங்கியோடுமென
கனவிலே உறைந்து போய் நானும் காத்துகிடந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்திலே அவன் பலகலைகள் செய்து
கண்ணெதிரே நிகழ்தினன் அவள் இதய திருட்டை
கவிதையும் பிறந்தது அந்த காதல் கண்டு
கவனமாய் இம்முறை அவள் தங்கையிடம் தந்துவிட்டேன்
காதல் சொல்லும் அந்தக் கடிதக் கவிதையை
கண்ணியமானோரேக் கூறுங்கள் இந்தக் காதல் இளவரசனுக்கு
காவியம் படைக்கும் இந்தக் காதல்தானே நிதர்சனக்காதல்

ரகசியம்
ரகசியங்கள் ரகசியமாய் இருக்க
ரகசியமாய் திட்டம் தீட்டினேன்
ரகசியமோ ரகசியமாய் என்னுள்
ரகசியமானதேன்
ரகசியமாய் திட்டம் தீட்டினேன்
ரகசியமோ ரகசியமாய் என்னுள்
ரகசியமானதேன்
அன்றும் - இன்றும்
அன்று
பழக்கம் இல்லையென்றேன்
இந்த பாழாய் போன காதல் (இதுவரை) செய்து
எல்லாம் இம்மண்ணில் ஒருநாள்
எல்லோற்கும் புதிது என்றாய் நீ
இன்று
பழகவே இல்லையென்கிறாய்
இந்த பாழாய் போன காதல் (என்னுடன்) செய்து
எல்லோர்கும் இம்மண்ணில் ஒருநாள்
எல்லாம் முடிவுரும் என்றறிவேன் நான்.
பழக்கம் இல்லையென்றேன்
இந்த பாழாய் போன காதல் (இதுவரை) செய்து
எல்லாம் இம்மண்ணில் ஒருநாள்
எல்லோற்கும் புதிது என்றாய் நீ
இன்று
பழகவே இல்லையென்கிறாய்
இந்த பாழாய் போன காதல் (என்னுடன்) செய்து
எல்லோர்கும் இம்மண்ணில் ஒருநாள்
எல்லாம் முடிவுரும் என்றறிவேன் நான்.
Thursday, January 4, 2007
பிரிவும் - வரவும்
பல பிரிவுகளையும்
புதிய உறவுகளையும்
தந்து செல்கிறது '2006'
இவ்வாண்டில் பல கசந்தாலும்
நம்வாழ்வில் சில இனித்தாலும்
எல்லாமே புது அனுபவமே
நம்மில் அறிவிலும் , அன்பிலும் ,
பணியிலும் , பண்பிலும் ,
வயதிலும் , வாழ்விலும்
முதிர்வைத் தந்த '2006'-ஐ
பிரிதல் நமக்குக் கடினமே
பிரிதலே காலதின் கட்டாயம்
ஒன்றிணைந்து வாருங்கள்
'2006'-ஐ வழியனுப்பி
'2007'-ஐ வரவேற்போம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய உறவுகளையும்
தந்து செல்கிறது '2006'
இவ்வாண்டில் பல கசந்தாலும்
நம்வாழ்வில் சில இனித்தாலும்
எல்லாமே புது அனுபவமே
நம்மில் அறிவிலும் , அன்பிலும் ,
பணியிலும் , பண்பிலும் ,
வயதிலும் , வாழ்விலும்
முதிர்வைத் தந்த '2006'-ஐ
பிரிதல் நமக்குக் கடினமே
பிரிதலே காலதின் கட்டாயம்
ஒன்றிணைந்து வாருங்கள்
'2006'-ஐ வழியனுப்பி
'2007'-ஐ வரவேற்போம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
காதல் செய்ய சொல்லுதடி
இது என்ன மனசோ ,
காதல் செய்ய சொல்லுதடி ...
காதலுக்கு அர்த்தமும் புரியல
காதலர்கள் உறவுகளும் சரி-இல்ல
கனவுக்கு மட்டும் குறையில்ல
நடப்பது எதுவும் விளங்கல
நேற்று வரையோ நினைப்பில்ல
இன்று என்னவோ உறக்கமில்ல
இடையில் வந்ததுக்கு உருவமில்ல
இது படுதுறபாடு முடியல
தூக்கம் என்னில் வர மறுக்குதே
வேலைகள் ஆயிரம் இங்கே இருக்குதே
நினைவுகள் என்னை ரொம்ப பொசுக்குதே
எண்ணம் அவளுள் உறைந்து கிடக்குதே
ஏதோ இந்த மனசு
காதல் செய்ய சொல்லுதடி ...
காதல் செய்ய சொல்லுதடி ...
காதலுக்கு அர்த்தமும் புரியல
காதலர்கள் உறவுகளும் சரி-இல்ல
கனவுக்கு மட்டும் குறையில்ல
நடப்பது எதுவும் விளங்கல
நேற்று வரையோ நினைப்பில்ல
இன்று என்னவோ உறக்கமில்ல
இடையில் வந்ததுக்கு உருவமில்ல
இது படுதுறபாடு முடியல
தூக்கம் என்னில் வர மறுக்குதே
வேலைகள் ஆயிரம் இங்கே இருக்குதே
நினைவுகள் என்னை ரொம்ப பொசுக்குதே
எண்ணம் அவளுள் உறைந்து கிடக்குதே
ஏதோ இந்த மனசு
காதல் செய்ய சொல்லுதடி ...
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
இந்த திருமண நிச்சயம் சொர்கத்துல..
ஆனா திருமண வாழ்கை நரகத்துல ..
அன்றோ நீயும் வந்தாய் பக்கத்துல ..
த் நானும் இருந்தேன் மயக்கத்துல ..
எங்க ஆத்தா சொன்னாள் பாசத்துல ..
எந்தன் அப்பு கத்தினார் கோபத்துல ..
இன்று அடியேன் சிக்கினேன் ஆபத்துல ..
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
நண்பங்களா
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
இந்த காதல்
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
ஆனா திருமண வாழ்கை நரகத்துல ..
அன்றோ நீயும் வந்தாய் பக்கத்துல ..
த் நானும் இருந்தேன் மயக்கத்துல ..
எங்க ஆத்தா சொன்னாள் பாசத்துல ..
எந்தன் அப்பு கத்தினார் கோபத்துல ..
இன்று அடியேன் சிக்கினேன் ஆபத்துல ..
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
நண்பங்களா
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
இந்த காதல்
கண்ணாலந்தான் பண்ணிக்காதீங்கோ
Subscribe to:
Posts (Atom)