எனக்கே நான் புரியாத புதிர்

Thursday, January 4, 2007

காதல் செய்ய சொல்லுதடி

இது என்ன மனசோ ,
காதல் செய்ய சொல்லுதடி ...
காதலுக்கு அர்த்தமும் புரியல
காதலர்கள் உறவுகளும் சரி-இல்ல
கனவுக்கு மட்டும் குறையில்ல
நடப்பது எதுவும் விளங்கல

நேற்று வரையோ நினைப்பில்ல
இன்று என்னவோ உறக்கமில்ல
இடையில் வந்ததுக்கு உருவமில்ல
இது படுதுறபாடு முடியல

தூக்கம் என்னில் வர மறுக்குதே
வேலைகள் ஆயிரம் இங்கே இருக்குதே
நினைவுகள் என்னை ரொம்ப பொசுக்குதே
எண்ணம் அவளுள் உறைந்து கிடக்குதே

ஏதோ இந்த மனசு
காதல் செய்ய சொல்லுதடி ...

2 comments:

சேதுக்கரசி said...

கிராமிய நடை நன்றாக இருக்கிறது.

Sankararam said...

நன்றி சேதுக்கரசி அவர்களே ...